அரசாங்கம் வழங்கிய அனைத்து சாதனங்களிலிருந்தும் டிக்டொக் செயலியை பயன்படுத்துவதை தடை செய்ய கனடா தீர்மானித்துள்ளது.
இன்று (28) முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தனியுரிமை மற்றும் பாதுகாப்பிற்கு ஏற்றுக்கொள்ள முடியாத அளவு ஆபத்து இருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.