வர்த்தகப் பண்ட ஏற்றுமதி வருமானமானது, கடந்த 2022 ஜனவரியுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு ஜனவரியில் 11.3 சதவீதம் குறைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், கடந்த ஆண்டு ஜனவரியுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு ஜனவரியில் இறக்குமதி செலவினம் 29.2 சதவீதம் குறைந்துள்ளது.
கடந்த ஜனவரியில் இறக்குமதி செலவினம் 1.38 பில்லியன் அமெரிக்க டொலர்களாகவும், கடந்த 2022 ஆம் ஆண்டு ஜனவரியில் 1.95 பில்லியன் டொலர்களாகவும் பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.