QR குறியீட்டின் அடிப்படையில் தற்போது வாகனங்களுக்கு வாராந்தம் மட்டுப்படுத்தப்பட்ட எரிபொருள் வழங்கப்படுகிறது.
நான்கு சக்கர மென் வாகனங்களுக்கு வாராந்தம் 20 லிட்டர் எரிபொருளும், பார வாகனங்களுக்கு 40 லிட்டரும் வழங்கப்படுகின்றது.
இதனை அதிகரிக்க நீண்டகாலமாக கோரிக்கை முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், அதுகுறித்து பரிசீலிக்கப்படுவதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார்.
தற்போதைய எரிபொருள் பாவனை மற்றும் விநியோகர தரவுகளை ஆய்வு செய்து, ஒதுக்கத்தை அதிகரிக்க உத்தேசித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.