Monday, August 11, 2025
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டு6 இலட்சம் மின் பாவனையாளர்களின் மின்சாரம் துண்டிக்கப்படும் அபாயம்

6 இலட்சம் மின் பாவனையாளர்களின் மின்சாரம் துண்டிக்கப்படும் அபாயம்

அதிகரித்துள்ள கட்டணத்தைச் செலுத்த முடியாத 6 இலட்சத்துக்கும் அதிகமான மின் பாவனையாளர்களின் மின்சாரம் துண்டிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக மின்சார சபை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பொருளாதார நெருக்கடியின் ஆரம்பத்திலிருந்து மின்சாரம் மற்றும் நீர் கட்டணம் செலுத்துவது 40 வீதத்தால் குறைந்துள்ளதாக மின்சாரம் மற்றும் நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபைகளின் அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

அதிக மின் கட்டணம் காரணமாக, நுகர்வோர் ஏற்கனவே மின் சாதனங்களின் பயன்பாட்டை வெகுவாகக் குறைத்துள்ளனர்.

இது எதிர்காலத்தில் மேலும் அதிகரிக்கக்கூடும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

மின்சாரம் மற்றும் குடிதண்ணீர் கட்டணம் அதிகமாக உள்ளதால், அன்றாட தேவைக்குச் செலவழிக்க வேண்டிய பணத்தை, அந்த கட்டணத்தை செலுத்தவே செலவிட வேண்டியுள்ளதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles