ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்திற்கு 200 மீட்டர்கள் தொலைவில் உள்ள வீட்டில் இரண்டு பெண்கள் தீயில் எரிந்து உயிரிழந்துள்ளனர்.
குறித்த பெண்கள் இருவரும் 65 வயதிற்கு மேற்பட்ட நிலையில் தனியாக வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்றையதினம் இவ்வாறு சடலமாக காணப்பட்டனர்.
அவர்களது சடலத்திற்கு அருகாமையில் தீப்பெட்டி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கொலையா தற்கொலையா என இதுவரை தெரியவில்லை.
இச்சம்பவம் குறித்து ஊர்காவற்துறை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.