மாலபே நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலையை தனியார் முதலீட்டாளருக்கு விற்பனை செய்ய சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
இது தொடர்பான விளம்பரங்களை அடுத்த வாரம் அச்சு ஊடகங்களில் வெளியிட சுகாதார அமைச்சு திட்டமிட்டுள்ளது.
இரண்டு தனியார் முதலீட்டாளர்கள் முன்மொழிவுகளை அழைப்பதற்கு முன்னரே சுகாதார அமைச்சிடம் தமது முன்மொழிவுகளை வழங்கியுள்ளனர்.
இவ்வைத்தியசாலை சுகாதார அமைச்சினால் கையகப்படுத்தப்பட்ட போதிலும்இ அதனை நடத்துவதற்கு வருடாந்தம் ஐம்பது மில்லியன் ரூபாவை பொது திறைசேரி வழங்கியுள்ளது.
இந்நிலையில், அந்த தொகையை வழங்குவதை நிறுத்த நிதி அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
எனவே சுகாதார அமைச்சு இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
#Aruna