இலங்கை பெற்றோலிய சட்டக் கூட்டுத்தாபன ஊழியர்களின் மேலதிக நேர கொடுப்பனவை குறைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
நாடு எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடி காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர குறிப்பிட்டார்.
மின் பொறியியலாளர்களுக்கோ அல்லது ஏனைய அதிகாரிகளுக்கோ மேலதிக நேர கொடுப்பனவுகளை வழங்குவதற்காகவோ மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்பபடவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
மின்கட்டண உயர்வுக்குப் பிறகு கடன் வாங்க முடிந்ததாகவும், அதன் மூலம் இரண்டு முக்கிய வங்கிகளில் பணம் பெற்று எரிபொருள் வாங்கி மின்சாரம் வழங்குவதை தொடர்வதாகவும் அவர் தெரிவித்தார்.