ஜோன் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழக பேராசிரியர் ஸ்டீவ் ஹான்கேவின் சமீபத்திய பணவீக்க சுட்டெண்ணின் படி, இலங்கை பதின்மூன்றாவது இடத்திற்கு வீழ்ந்துள்ளது.
எவ்வாறாயினும், கடந்த ஆண்டு ஜூன் மாதம், அந்த பட்டியலில் சிம்பாப்வேக்கு அடுத்தபடியாக இலங்கை இரண்டாவது இடத்தில் இருந்தது.
தற்போது இலங்கை பணவீக்கத்தை கட்டுப்படுத்தி கணிசமான வளர்ச்சியை அடைந்துள்ளதுடன், இன்று அந்த அறிக்கையில் சிம்பாப்வே முதல் இடத்தில் உள்ளது.
மேலும், உலகின் மிகவும் பலவீனமான நாணயமாக மாறிய இலங்கை ரூபா சற்று முன்னேற்றம் அடைந்து உலகின் பலவீனமான நாணயங்களில் பல இடங்கள் முன்னேறியுள்ளதாக அவரது ட்விட்டர் கணக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

