Monday, August 11, 2025
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநுரைச்சோலை அனல் மின் நிலையத்தை இயக்குவதில் சிக்கல்

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தை இயக்குவதில் சிக்கல்

இலங்கை மின்சார சபையில் பொறியியலாளர்கள் பற்றாக்குறை நிலவுவதால் எதிர்வரும் காலங்களில் தொடர்ச்சியாக மின்சார விநியோகத்தை வழங்க முடியாது என மின்சார சபையின் பொறியியலாளர் சங்கம் எச்சரித்துள்ளது.

மேலும், நுரைச்சோலை அனல்மின் நிலையத்தை இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் சங்கத்தின் இணைச் செயலாளர் இசுரு கஸ்தூரிரத்ன குறிப்பிட்டார்.

கடந்த ஒரு வருடத்தில் மின்சார சபையின் 72 பொறியியலாளர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாகவும் அவர்களில் இருபத்தி இரண்டு பேர் நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தில் பணி புரிந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தை வழமையாக நடத்துவதற்கு 123 பொறியியலாளர்கள் பணியாற்ற வேண்டும் எனவும், ஆனால் இன்று 100 பேரே பணிபுரிவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், இந்தப் பொறியியலாளர் பற்றாக்குறையால், வருங்காலத்தில் மின் ஆலையை நிறுத்த வேண்டிய நிலை கூட ஏற்படலாம் என்றும், அப்படி நடந்தால், மின் நெருக்கடி கடுமையாகும் என்றும் அவர் கூறினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles