Monday, August 11, 2025
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசசி வீரவன்சவுக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

சசி வீரவன்சவுக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

போலி கடவுச்சீட்டு விவகாரம் குறித்து சசி வீரவன்சவுக்கு எதிரான வழக்கு விசாரணையை எதிர்வரும் 28ஆம் திகதி வரை ஒத்திவைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (24) உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று (24) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, ​​பிரதிவாதியான சசி வீரவன்ச நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. அப்போது அவர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், தங்கள் கட்சிக்காரர் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

மருத்துவச் சான்றிதழை நீதிமன்றத்தில் சமர்ப்பித்த வழக்கறிஞர்கள், மூன்று நாட்கள் ஓய்வெடுக்க மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளதாகத் தெரிவித்தனர்.

அதன்படி, விசாரணையை வரும் 28ம் திகதிக்கு ஒத்திவைத்த நீதிமன்றம், அன்றைய தினம் மீண்டும் விசாரணை நடத்துவதாக அறிவித்தது.

குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது சாட்சியமளிப்பதற்காக முன்னாள் குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் மற்றும் முன்னாள் மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் ஆகியோர் முன்னிலையாகினர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles