மன்னார் மற்றும் பூநகரி பகுதியில் 350 மெகாவோட் காற்றாலை மின் உற்பத்தி நிலையங்களை நிர்மாணிப்பதற்கான அனுமதியை இலங்கை முதலீட்டு சபை நேற்று இந்திய அதானி நிறுவனத்திற்கு வழங்கியது.
முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தலைமையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது இதற்கான அனுமதி வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் இந்திய அதானி நிறுவனத்தின் பிரதிநிதிகள் பங்கேற்றிருந்தனர்.
காற்றாலை மின் உற்பத்தி நிலையத்திற்கான ஒப்பந்தம் 2022 ஆம் ஆண்டு மார்ச் 11 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டது.
இது தொடர்பான அனுமதியே இலங்கை முதலீட்டு சபையினால் நேற்றைய தினம் அதானி நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.
இந்த முதலீட்டு திட்டத்தின் பெறுமதி 442 மில்லியன் அமெரிக்க டொலர் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த செயற்திட்டத்தை இரண்டு வருடங்களில் நிறைவுறுத்த எதிர்பார்க்கப்படுகின்றது.
இதன்படி, மன்னாரில் ஸ்தாபிக்கப்படவுள்ள காற்றாலை மின்னுற்பத்தி நிலையத்தின் ஊடாக 250 மெகாவொட் மின் அலகும் பூநகரி பிரதேசத்தில் அமைக்கப்படவுள்ள காற்றாலை மின் உற்பத்தி செயற்திட்டத்தின் ஊடாக 100 மெகாவட் மின் அலகும் உற்பத்தி செய்யப்படவுள்ளன.