சந்தையில் பெருமளவு அதிகரித்துள்ள தேங்காய்களின் விலை எதிர்வரும் மார்ச் மாதத்திற்குள் வழமைக்குத் திரும்பும் என தென்னைச் செய்கை சபையின் தலைவர் மாதவி ஹேரத் தெரிவித்தார்.
ஒவ்வொரு வருடமும் இந்தக் காலப்பகுதியில் தேங்காய்களின் விலை குறிப்பிட்ட மட்டத்திற்கு அதிகரிப்பதாகவும், இக்காலத்தில் தேங்காய் அறுவடை குறைவதால் விலை அதிகரிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தற்போது சந்தையில் தேங்காய் ஒன்றின் விலை 130 ரூபாவாகவும், சாதாரண அளவிலான தேங்காய் 80 முதல் 90 ரூபா வரையிலும் விற்பனை செய்யப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.