பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகம், முதலாம் ஆண்டு மாணவர்களுக்காக எதிர்வரும் 27 ஆம் திகதி திறக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழகத்தின் உபவேந்தர், பேராசிரியர் நெலுவே சுமனவங்ச தேரர் தெரிவித்துள்ளார்.
அனைத்து மாணவர்களையும் அழைத்து பல்கலைக்கழகத்தை திறக்குமாறு மாணவர்கள் கோரிக்கை விடுத்த போதிலும், அவ்வாறு திறப்பதற்கு இயலாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கட்டம் கட்டமாக பல்கலைக்கழகத்தை திறந்து வைப்பதாக கட்டுப்பாட்டுச் சபை அறிவித்துள்ளதாகவும் உபவேந்தர் நெலுவே சுமனவங்ச தேரர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகத்தை மீள ஆரம்பிக்குமாறு கோரி பிட்டிபன பல்கலைக்கழத்திற்கு அருகில் பிக்கு மாணவர்கள் உள்ளிட்ட குழுவினர் நேற்று(22) பிற்பகல் ஆரம்பித்த சத்தியாகிரகத்தைக் கலைப்பதற்காக பொலிஸாரினால் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.