Tuesday, November 19, 2024
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநீர் கட்டண அதிகரிப்பு குறித்து ஆராய குழு

நீர் கட்டண அதிகரிப்பு குறித்து ஆராய குழு

மின் கட்டண அதிகரிப்பு காரணமாக நீர் விநியோக செலவு 65 வீதத்தால் அதிகரித்துள்ளதாக தேசிய நீர்வள சபையின் பொது முகாமையாளர் கலாநிதி வசந்த இளங்கசிங்க தெரிவித்துள்ளார்.

2012ஆம் ஆண்டு குடிநீர்க் கட்டணத்தை உயர்த்திய பின்னர், 2022ஆம் ஆண்டு வரை மீண்டும் நீர்க் கட்டணம் அதிகரிக்கப்படவில்லை என சுட்டிக்காட்டிய அவர், நீர்வள சபை பல சிரமங்களுக்கு மத்தியிலும் மக்களுக்கு உயர்தர சேவைகளை வழங்கி வருவதாக தெரிவித்தார்.

நீர்வள சபைக்கு கிடைக்கும் வருமானம் போதாது எனவும் மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கு முன்னர் அதனை எப்படியாவது சமாளித்து விட்டதாகவும் ஆனால் தற்போது இக்கட்டான நிலையை எதிர்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

2022 செப்டம்பரில் தண்ணீர் கட்டணத்தை உயர்த்த அமைச்சர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

எவ்வாறாயினும், குடிநீர் கட்டண உயர்வு குறித்து ஆய்வு செய்ய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், தற்போதைய சூழ்நிலையில் குடிநீர் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என்றும், ஆனால் எவ்வளவு, எப்போது என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles