வடகொரியா கடுமையான உணவு நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாக உலக உணவுத் திட்டம் சுட்டிக்காட்டியுள்ளது.
அந்த நாட்டு மக்களின் பிரதான வாழ்வாதாரமாக விவசாயம் காணப்படுகின்ற போதிலும், தேவையான பணம் இல்லாத காரணத்தினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வடகொரியாவின் உணவு உற்பத்தி கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் குறைந்துள்ளதாக உலக உணவுத் திட்டம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
எவ்வாறாயினும், விவசாயத் தொழிலுக்கு ஒதுக்கப்படும் பணத்தை விட ஆயுதங்களை கொள்வனவு செய்வதற்கு அந்நாட்டு அரசாங்கம் அதிகளவு செலவு செய்வதால் இந்த நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.