Friday, September 5, 2025
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதேர்தல் ஆணைக்குழுவுக்கு பணம் அனுப்பும் வாக்காளர்கள்

தேர்தல் ஆணைக்குழுவுக்கு பணம் அனுப்பும் வாக்காளர்கள்

பாதுக்க பிரதேசத்தைச் சேர்ந்த வாக்காளர்கள் சிலர், உள்ளூராட்சி தேர்தலுக்காக தேர்தல்கள் ஆணைக்குழுவிற்குத் தேவையான பணத்தை வழங்கும் பொருட்டு, தபால் நிலையத்தின் ஊடாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு ‘காசுக் கட்டளை்’ அனுப்பும் நிகழ்வு இன்று (22) பாதுக்க தபால் நிலையத்தில் இடம்பெற்றது.

இங்கு பாதுக்க பிரதேசத்தைச் சேர்ந்த வாக்காளர்கள் குழு ஒன்று பாதுக்க தபால் நிலையத்திற்கு வந்து தேர்தல் ஆணைக்குழுவின் தலைவரின் பெயருக்கு நூறு ரூபாவிலிருந்து ஐநூறு ரூபா வரை காசுக்கட்டளைகளை அனுப்பி வைத்துள்ளனர்.

அரசியலமைப்பு ரீதியாக தேர்தல் என்பது மக்களின் அடிப்படை உரிமை என்பதால் தேர்தலை நடத்தி மக்களின் உரிமைகளை பாதுகாப்பது அரசாங்கத்தின் பொறுப்பு எனவும், அவர்களின் அடிப்படை உரிமைகளை பாதுகாக்க அரசாங்கத்திடம் பணம் இல்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

எனவே, உரிமைகளை பாதுகாக்கும் பொருட்டு, தாம் உழைத்த பணத்தை தேர்தல் ஆணைக்குழுவின் தலைவருக்கு அனுப்பி வைப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles