நேபாளம் – ஸ்கொட்லாந்து அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் கிரிக்கெட் போட்டி அண்மையில் நடைபெற்றது.
போட்டிக்குப்பின் ஸ்கொட்லாந்து வீரர்கள் நேபாள நாட்டு அணி வீரர்களுடன் கைகுலுக்கினர்.
ஆனால் நேபாள வீரரான சந்தீப் லமிச்சானுடன் பலரும் கைகுலுக்க மறுத்துவிட்டனர்.
அது தொடர்பான காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
நேபாள கிரிக்கெட் அணியின் தலைவராக செயற்பட்ட சந்தீப் லமிச்சான், இதுவரை 30 சர்வதேச ஒரு நாள் போட்டிகள் மற்றும் 44 இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
கடந்த ஆண்டு ஒகஸ்ட் மாதம், 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து அவரை நேபாள கிரிக்கெட் இடைக்கால தடை விதித்தது.
கடந்த ஜனவரி 31ஆம் திகதி சந்தீப் லமிச்சான் மீது பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவை நீக்குவதாக தீர்மானிக்கப்பட்டது.
அதன் பிறகு 4 சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் விளையாடவும் அவரை நேபாள கிரிக்கெட் அணி அனுமதித்தது.
இந்நிலையில், அண்மைய போட்டியில் அவருடன் ஸ்கொட்லாந்து வீரர்கள் கைகுழுக்க மறுத்துள்ளனர்.