இரண்டு நாய்க்குட்டிகளை காரை ஏற்றி கொன்ற சம்பவம் தொடர்பில் சந்தேக நபரை மத்துரட்ட பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த நாய்க்குட்டிகள் கொல்லப்பட்ட சிசிடிவி காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வைரலானதுடன், கடந்த 18ஆம் திகதி சம்பவம் தொடர்பில் முறைப்பாடளிக்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரான பெண் வலப்பனை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான பிணையில் விடுவிக்கப்பட்டார்.
குறித்த பெண் நீதிமன்றில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளதுடன், வழக்கை ஜூன் முதலாம் திகதி மீள அழைக்க தீர்மானிக்கப்பட்டது.
குறித்த இரண்டு நாய்க்குட்டிகளும் யாரோ ஒருவரால் வீதியில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் பின்னர் கடந்த 17ஆம் திகதி பிற்பகல் இரண்டு நாய்க்குட்டிகளையும் கார் ஏற்றி செல்லும் காட்சி அருகில் இருந்த பாதுகாப்பு கமெராவில் பதிவாகியுள்ளது.
பின்னர், இந்த சம்பவம் தொடர்பாக பல விலங்கு அமைப்புகள் அளித்த புகாரின்படி, சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரான பெண்ணை மத்துரட்ட பொலிசார் கைது செய்தனர்.
மத்துரட்ட – எஹலகஸ்தென்ன பிரதேசத்தை சேர்ந்த 27 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.