இராஜாங்க அமைச்சர்களின் பாவனைக்காக 239 வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும், அவை துறைமுகத்தில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னாள் அமைச்சர் டிலான் பெரேரா இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
நாட்டு மக்கள் மின்சார கட்டண அதிகரிப்பால் அவதியுறுகின்றனர்.
ஆனால் அமைச்சர்கள் சொகுசாக வாழ்வதற்கு அரசாங்கம் இவ்வாறான செலவுகளை செய்கிறது.
தேர்தல் நடத்த பணம் இல்லை என்று கூறும் அரசாங்கம், இவ்வாறான அநியாயச் செலவுகளை மேற்கொள்கிறது என்று டிலான் பெரேரா குற்றம் சுமத்தியுள்ளார்.