Sunday, November 17, 2024
27.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவருட இறுதியில் பொதுமக்களுக்கு அதிக நிவாரணம்

வருட இறுதியில் பொதுமக்களுக்கு அதிக நிவாரணம்

மின்சாரக் கட்டணக் குறைப்பு உள்ளிட்ட பொருளாதாரச் சலுகைகள் இவ்வருட இறுதிக்குள் சாத்தியமாகும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

மத்திய கொழும்பில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இந்த வருட இறுதிக்குள் மக்களுக்கு சலுகைகளை வழங்க முடியும், ஆனால் அதுவரை அவர்கள் சிரமங்களை தாங்க வேண்டியிருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மின் கட்டண உயர்வால் மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருவதை நாங்கள் அறிவோம்.

பாடசாலை எழுது பொருட்கள் மற்றும் இதர பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ளது. இவை அனைத்தையும் நாங்கள் அறிவோம்.

மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பது போன்ற கடினமான தீர்மானங்களை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எடுக்க வேண்டியிருந்தது. இக்கட்டான நேரத்தில் ஜனாதிபதி அரசாங்கத்தைக் கைப்பற்றினார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இந்தப் பொறுப்பை முன்வைத்த போது எதிர்க்கட்சியிலுள்ள எவரும் அதனை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஒரு காயத்திற்கு சிகிச்சை அளிக்கும் போது ஒருவர் அதிக வலியை அனுபவிக்க வேண்டும். அதேபோல், இந்நாட்டு மக்கள் தற்காலிகமாக ஒரு கடினமான காலத்தை சந்திக்க வேண்டியிருக்கும்.

இந்தாண்டு இறுதிக்குள் மின் கட்டணத்தை குறைத்து மக்களுக்கு மேலதிக சலுகைகளை வழங்க முடியும். சர்வதேச நாணய நிதியம் மற்றும் பிற நன்கொடையாளர்களிடமிருந்து நாங்கள் உதவி பெறும்போது இது சாத்தியமாகும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles