Sunday, August 3, 2025
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமுன்னாள் மத்திய வங்கி ஆளுநரின் நடவடிக்கைகளினாலேயே IMF நிதி தாமதமானது

முன்னாள் மத்திய வங்கி ஆளுநரின் நடவடிக்கைகளினாலேயே IMF நிதி தாமதமானது

இலங்கையின் கடனை மறுசீரமைப்பதில் சீனாவின் சாதகமான பதிலில் ஏற்பட்ட தாமதமே சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிணை எடுப்புக்கு தற்போது தடையாக உள்ளது என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நாட்டின் பொருளாதாரத்தில் சர்வதேச சமூகத்தின் நம்பிக்கையை உறுதிப்படுத்த இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவு தேவை என்றும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

2021 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இலங்கை சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெற வேண்டும் என ஆலோசனைகள் வழங்கப்பட்டதாகவும், “அப்போதைய மத்திய வங்கி ஆளுநர் அவ்வாறு செய்ய மறுத்ததால் எமக்கு IMF உதவி கிடைப்பது தாமதமாகியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles