Wednesday, September 3, 2025
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமலை ஏற முயன்று கடும் மழையால் நிர்க்கதியான 33 பேர் மீட்கப்பட்டனர்

மலை ஏற முயன்று கடும் மழையால் நிர்க்கதியான 33 பேர் மீட்கப்பட்டனர்

நக்கிள்ஸ் சரணாலயத்திற்கு சொந்தமான கெரடிகல மலையில் ஏறும் போது கடும் மழை மற்றும் பனிமூட்டம் காரணமாக நிர்க்கதியாகியிருந்த 33 பேர் இன்று பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

கடந்த (18) திகதி கெரடிகல மலையை ஏறுவதற்கு வந்த குறித்த நபர்கள் கடும் மழை மற்றும் பனிமூட்டம் காரணமாக நிர்க்கதியாகியிருந்த நிலையில், அவர்களை மீட்கும் நடவடிக்கையை உடுதும்பர பொலிஸார் முன்னெடுத்திருந்தனர்.

பொலிஸார் வன பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் இராணுவத்தினர் இணைந்து இவர்களை மீட்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்டவர்கள் கண்டி, ஹோமாகம, கொழும்பு மற்றும் காலி ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles