Friday, December 12, 2025
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமனு பரிசீலணைக்கு அவசரமில்லை - சட்டத்தரணிகள் அறிவிப்பு

மனு பரிசீலணைக்கு அவசரமில்லை – சட்டத்தரணிகள் அறிவிப்பு

உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி ஓய்வுபெற்ற இராணுவ கேர்ணல் டபிள்யூ. எம். ஆர். விஜேசுந்தரவினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை எதிர்வரும் 23 ஆம் திகதிக்கு முன்னரே பரிசீலனைக்கு அழைக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட சீராக்கல் மனுவை பரிசீலிக்க வேண்டிய அவசியமில்லை என அவரது சட்டத்தரணிகள் இன்று (20) உயர் நீதிமன்றிற்கு அறிவித்துள்ளனர்.

தபால் மூல வாக்களிப்பு ஒத்தி வைக்கப் பட்டுள்ள நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அதன்படி, குறித்த மனுவை பரிசீலனைக்கு, முன்பு திட்டமிட்டபடி வரும் 23ஆம் திகதி அழைக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles