Monday, December 22, 2025
24.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபேருந்து விபத்து: பலி எண்ணிக்கை 3 ஆக அதிகரிப்பு

பேருந்து விபத்து: பலி எண்ணிக்கை 3 ஆக அதிகரிப்பு

சிவனொளிபாதமலை யாத்திரை சென்று திரும்பிய பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளான சம்பவத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது.

இந்த விபத்தில் முன்னதாக இரு பெண்கள் உயிரிழந்த நிலையில், தற்போது ஹிக்கடுவை பகுதியைச் சேர்ந்த 32 வயதான ஆண் ஒருவரும் உயிரிழந்துள்ளார்.

பொலிஸார் மற்றும் பொதுமக்கள் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையில் சம்பவ இடத்திலிருந்து குறித்த நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்த ஏனைய இரு பெண்களும் தெலிஜ்ஜவில மற்றும் பண்டாரவளை பகுதியைச் சேர்ந்த 30 மற்றும் 26 வயதான இருவரென பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நோட்டன் ப்ரிட்ஜ் – தியகலஇ டெப்லா பகுதியில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

குறித்த விபத்தில் 25 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸாரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்துக்குள்ளான பேரூந்தில் பயணித்தவர்கள் கொழும்பு – மஹரகம பகுதியிலிருந்து சிவனொளிபாதமலை யாத்திரைக்கு சென்றவர்கள் என தெரியவந்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles