துருக்கி-சிரியா பூகம்பத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு புதிய மனிதாபிமான உதவியாக 100 மில்லியன் டொலர்களை வழங்குவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
தற்போது துருக்கிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க இராஜாங்க செயலாளர் அந்தோனி பிளிங்கன் இந்த உதவி வழங்கப்படும் என அறிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சிரியாவில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் செயல்படும் மீட்புக் குழுக்களின் உறுப்பினர்களையும் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் சந்தித்துள்ளார்.
இரண்டு மாநிலங்களைத் தவிர மற்ற மாநிலங்களில் மீட்புப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும், 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தின் மையப்பகுதிகளான ஹடாய் மற்றும் கஹ்ராமன்மாராஸ் மாவட்டங்களில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அதிகாரிகள் அறிவித்தனர்.