பெற்றோல் மற்றும் டீசல் எரிபொருளின் மூலம் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் இலாபம் ஈட்டி வருவதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இதன்படி, ஒக்டேன் 92 பெற்றோல் லீற்றருக்கு 16.21 ரூபாவும், ஒக்டேன் 95 பெற்றோல் லீற்றருக்கு 109.44 ரூபாவும், லங்கா ஆட்டோ டீசல் லீற்றருக்கு 3.25 ரூபாவும், சுப்பர் டீசல் லீற்றருக்கு 11.64 ரூபாவும் கூட்டுத்தாபனம் இலாபம் ஈட்டுகிறது.
ஆனால், ஸ்ரீஒவ்வொரு வீற்றர் மண்ணெண்ணெய்க்கும் 21.49 ரூபா நஷ்டம் ஏற்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
இந்த இலாப நஷ்டக் கணக்கீடு கடந்த 18ம் திகதிக்கு பொறுந்துவதாக அவர் மேலும் தெரிவித்தார்.