அச்சிடப்பட்ட தபால் மூல வாக்குச் சீட்டுகள் எதிர்கால பயன்பாட்டிற்காக இரகசிய ஆவணக் களஞ்சியத்தில் வைக்கப்பட்டுள்ளதாக அரச அச்சக மா அதிபர் கங்கானி லியனகே தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக 22 மாவட்டங்களுக்கும் தபால் மூல வாக்குச் சீட்டுகள் அச்சடிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அச்சிடப்பட்ட வாக்குச் சீட்டுகள் மற்றும் ஏனைய ஆவணங்களுக்காக 15 கோடி ரூபாவிற்கும் அதிகமான பணம் செலவிடப்பட்டுள்ளதாக அரச அச்சக ஊடகப் பிரிவு அதிகாரி குறிப்பிட்டார்.
தேர்தல் நடவடிக்கைகளுக்கு பணம் வழங்க மாட்டோம் என திறைசேரியின் அறிக்கையுடன் தேர்தல் தொடர்பான வாக்குச்சீட்டுகள் மற்றும் ஆவணங்களை அச்சிடுவதை அரச அச்சகம் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.