இதுவரை 13 நிலக்கரி கப்பல்களுக்கான கட்டணம் செலுத்தப்பட்டு விட்டதாக இலங்கை நிலக்கரி நிறுவனம் தெரிவித்துள்ளது.
12ஆவது கப்பலின் தரையிறக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், 13ஆவது கப்பலின் தரையிறக்கம் நாளை (19) ஆரம்பமாகவுள்ளதாக அதன் பொது முகாமையாளர் நாமல் ஹேவகே தெரிவித்தார்.
மேலும், 36 நிலக்கரி கப்பல்களை இலங்கைக்கு கொண்டு வருவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வரை மின்சாரம் வழங்குவதற்கு தேவையான நிலக்கரி நிறுவனத்திடம் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.