Wednesday, March 19, 2025
27 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவத்தளை உட்பட சில பகுதிகளில் 12 மணித்தியால நீர்வெட்டு

வத்தளை உட்பட சில பகுதிகளில் 12 மணித்தியால நீர்வெட்டு

வத்தளை உட்பட எதிர்வரும் 21ஆம் திகதி காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை 12 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

களனி – பிரஞ்சுவத்த வீதி மற்றும் சரசவி மாவத்தை ஆகிய இடங்களில் அவசர திருத்தப் பணிகள் இடம்பெற்று வருவதால் நீர் விநியோகம் தடைப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி வத்தளை, ஹெந்தலை, அல்விஸ் டவுன், வெலிகடமுல்ல, கெரவலப்பிட்டிய, மாபோல, நாயக்கந்த, கலஹதுவா மற்றும் மருதானை வீதி ஆகிய பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடைப்படவுள்ளது.

மேலும், ஹுனுப்பிட்டிய, வெடிகந்த, வெவெல்துவ, பிரஞ்சுவத்த, கிரிபத்கொட நவபார, பாதிலியாதுடுவ வீதி மற்றும் தலுபிட்டிய வீதியில் இருந்து அக்பர் டவுன் பாலம் வரை நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை மேலும் தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles