தனியார் நிறுவனமொன்றில் பணியாற்றும் பெண்ணொருவர் இன்று காலை ரயிலில் மோதி உயிரிழந்துள்ளதாக வாத்துவ பொலிஸார் தெரிவித்தனர்.
மஹா வஸ்கடுவ – சிரில் மாவத்தையைச் சேர்ந்த சி.டி.சமரவீர முதலிகே சிந்தா பிரியதர்ஷனி (36) என்ற இரண்டு பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இன்று காலை 6.03 மணியளவில் வேலைக்கு செல்வதற்காக மருதானை நோக்கிச் செல்லும் ரயிலில் பயணிக்க சென்ற அவர், எதிர்திசையில் வந்த கொழும்பு நோக்கிச் செல்லும் 940 இலக்க ரயில் என்ஜினுடன் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
குடும்பத்தினர் சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை அடையாளம் கண்டுள்ளதுடன், வாத்துவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.