Tuesday, April 14, 2026
32 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமாத்தறை கடலில் மாயமான 3 சிறுவர்களில் ஒருவரின் சடலம் மீட்பு

மாத்தறை கடலில் மாயமான 3 சிறுவர்களில் ஒருவரின் சடலம் மீட்பு

நேற்று மாத்தறை கடற்பரப்பில் நீராடச் சென்று காணாமல் போனதாகக் கூறப்படும் மூன்று பாடசாலை மாணவர்களில் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

மாத்தறை, புறா தீவை அண்மித்த கடற்பகுதியில் மாகந்துர பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயதுடைய சிறுவனின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கடற்படையினரின் தேடுதல் நடவடிக்கையின் போது மீட்கப்பட்ட சடலம் மாத்தறை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

காணாமல் போன ஏனைய இரு பாடசாலை மாணவர்களைத் தேடும் நடவடிக்கையில் கடற்படையினர் தொடர்ந்தும் ஈடுபட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles