போதைப்பொருளுக்கு அடிமையாகி புனர்வாழ்வளிக்கப்பட்ட இளைஞர்களை வெளிநாட்டு வேலைகளுக்கு வழிநடத்த சிறைச்சாலை திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி, 16 வயது முதல் 22 வயது வரையிலான இளைஞர்களுக்கு தனியார் பல்கலைக்கழகம் மூலம் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பயிற்சி அளிக்கப்பட்டு, பின்னர் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு அனுப்பப்படும்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய, வேலைத்திட்டத்தின் ஆரம்ப கட்டமாக இவ்வாறான 50 இளைஞர்கள் வெளிநாட்டு வேலைகளுக்கு அனுப்பப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்தார்.