Thursday, December 25, 2025
31.7 C
Colombo
செய்திகள்உலகம்பல்கேரியாவில் லொறியிலிருந்து 18 ஆப்கான் அகதிகள் சடலங்களாக மீட்பு

பல்கேரியாவில் லொறியிலிருந்து 18 ஆப்கான் அகதிகள் சடலங்களாக மீட்பு

துருக்கியிலிருந்து பல்கேரியாவுக்குள் நுழைந்த கொள்கலன் லொறி ஒன்று ஆள்நடமாட்டம் அற்ற பகுதியில் நின்று கொண்டிருப்பதாக அந்நாட்டு பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து, தலைநகர் சோபியாவில் இருந்து 20 கிலோமீற்றர் தொலைவில் லொகர்ஸ்கொ என்ற கிராமத்தில் ஆள்நடமாட்டமற்ற பகுதியில் குறித்த லொறி நின்றுகொண்டிருந்தாக தெரிவிக்கப்படுகிறது.

அதன் சோதனையிட்ட போது, 52 பேர் அடைத்து வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.

இதில், 18 பேர் சடலங்களாகக் மீட்கப்பட்டுள்ளனர்.

குழந்தைகள் உட்பட எஞ்சிய 34 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொள்கலனில் இருந்தவர்கள் அனைவரும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த அகதிகள் என்றும், அகதிகள் அனைவரும் துருக்கியில் இருந்து பல்கேரியா வழியாக ஐரோப்பிய நாடுகளுக்குள் சட்டவிரோதமாக தஞ்சமடைய முயற்சித்ததும் விசாரணைகளில் தெரிய வந்தது.

இது தொடர்பாக 4 பேரை பல்கேரிய பொலிசார் கைது செய்தனர்.

#Sky News

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles