Thursday, December 18, 2025
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதுருக்கி மீட்பு பணிகளுக்காக இராணுவத்தினரை அனுப்ப பேச்சுவார்த்தை

துருக்கி மீட்பு பணிகளுக்காக இராணுவத்தினரை அனுப்ப பேச்சுவார்த்தை

துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கங்களால் 45,000 இற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.

இடம்பெயர்ந்த மக்களுக்கு உதவுவதற்கு இலங்கை இராணுவத்தின் ஆதரவை வழங்குவது தொடர்பில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

இந்த விசேட கலந்துரையாடல் ஜனாதிபதி செயலகத்தில் சாகல ரத்நாயக்க தலைமையில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்கலந்துரையாடலில் பாதுகாப்புத் துறைத் தலைவர்கள் குழுவும் கலந்துகொண்டது.

துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் துருக்கியில் 39,672 பேரும், சிரியாவில் 5,800 பேரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்போதும் பல நாடுகளைச் சேர்ந்த நிவாரண சேவைக் குழுக்கள் துருக்கியில் நிவாரண சேவைகளை வழங்குவதில் ஈடுபட்டுள்ளன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles