Monday, September 1, 2025
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசிசுவை கொலை செய்த குற்றச்சாட்டில் தாய் கைது

சிசுவை கொலை செய்த குற்றச்சாட்டில் தாய் கைது

பிறந்து ஏழு நாட்களே ஆன சிசுவை கொலை செய்தமைக்காக சந்தேகத்தின் பேரில் 28 வயதான தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பயாகல ஹல்கந்தவில கந்தகஹவில பிரதேசத்தை சேர்ந்த பெண்ணொருவரே இவ்வாறு கைதாகியுள்ளார்.

உயிரிழந்த குழந்தை அவருக்கு பிறந்த இரண்டு இரட்டை பெண்களில் இளைய குழந்தை என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கடந்த 15ஆம் திகதி குழந்தை படுக்கையில் இருந்து விழுந்ததாக கூறி களுத்துறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டது.

எனினும் பிரேத பரிசோதனையில் இது கொலை என தெரியவந்ததாக பொலிஸார் கூறுகின்றனர்.

சந்தேக நபரான தாய், சிறுமியை தரையில் மூன்று தடவை அடித்துள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles