பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள பொலிஸ் தலைமையகம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதில் 5 அல்லது 6 பயங்கரவாதிகள் ஈடுபட்டுள்ளதாக பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தாக்குதல் நடத்தியவர்களில் 2 பேர் கொல்லப்பட்டதாகவும்இ குறைந்தபட்சம் ஒரு பாதுகாப்பு அதிகாரி காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தானிய தலிபான்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இந்தத் தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளனர்.