ரக்பி உலகக் கோப்பை போட்டியில் வெற்றி பெறும் வீரர்களுக்கு வழங்கப்படும் ‘வெப் எல்லிஸ் கிண்ணத்தை’ காணும் வாய்ப்பு இலங்கையர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
அதன்படி, வார இறுதியில் கொழும்பு மற்றும் கண்டியில் இந்த கோப்பையை காணும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
குறித்த கிண்ணம் லொங்டொங் பிளேஸில் சனிக்கிழமை காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும்.
அதன்பின், குதிரை பந்தய மைதானத்தில் மதியம் முதல் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும். கோப்பை ஞாயிற்றுக்கிழமை CR & FCக்கு எடுத்துச் செல்லப்படும் என கூறப்படுகிறது.
பின்னர் கிண்ணம் கண்டிக்கு எடுத்துச் செல்லப்பட்டு, கண்டி விளையாட்டுக் கழகத்தின் தாயகமான நித்தவெல விளையாட்டுக் கழகத்தில் பெப்ரவரி 22 ஆம் திகதி காலை 10 மணி முதல் காட்சிப்படுத்தப்படும்.
ரக்பி உலகக் கோப்பை 2023-ம் ஆண்டு பிரான்சில் நடைபெற உள்ளது.