Thursday, December 18, 2025
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகொழும்பில் வர்த்தகரை கடத்தி கப்பம் கேட்ட கும்பல் - பொலிஸ் தீவிர விசாரணை

கொழும்பில் வர்த்தகரை கடத்தி கப்பம் கேட்ட கும்பல் – பொலிஸ் தீவிர விசாரணை

கட்டட சாதனங்களின் வர்த்தக வலையமைப்பு ஒன்றின் உரிமையாளர் கடந்த 10 ஆம் திகதி கடத்தப்பட்டு கப்பம் வழங்கியதன் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக பொலிஸாரிடம் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குற்றப் புலனாய்வுப் பிரிவினர் என்று தங்களை அடையாளப்படுத்திக் கொண்ட ஐந்து பேர் அவரை கடத்திச் சென்று இரகசிய இடமொன்றில் வைத்து 10 மில்லியன் ரூபா கப்பம் கேட்டு மிரட்டியுள்ளனர்.

பின்னர் 7 மில்லியன் ரூபா என கப்பத்தொகையை குறைத்ததன் படி, நண்பர் ஒருவரின் உதவியுடன் குறித்த வர்த்தகர் அந்த தொகையை வழங்கியுள்ளார்.

பணம் கிடைத்த பின் தெமட்டகொட ரயில்நிலையத்துக்கு அருகில் அவரை விட்டுச் சென்றுள்ளனர்.

கடத்தல்காரர்களின் அச்சுறுத்தல் காரணமாக தாம் இதுதொடர்பாக முதலில் முறைப்பாடு செய்யவில்லை என்று குறித்த வர்த்தகர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

#Daily news

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles