Monday, December 22, 2025
23.9 C
Colombo
செய்திகள்விளையாட்டுஇந்திய கிரிக்கெட் தேர்வுக் குழு தலைவர் ராஜினாமா

இந்திய கிரிக்கெட் தேர்வுக் குழு தலைவர் ராஜினாமா

இந்திய கிரிக்கெட் தேர்வுக் குழு தலைவர் பதவியில் இருந்து சேத்தன் சர்மா விலகியுள்ளார்.

அந்நாட்டில் உள்ள தொலைக்காட்சி சேனல் ஒன்று வெளியிட்ட தகவலை அடுத்து அவர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்.

அந்த சேனலின் பத்திரிக்கையாளரிடம் பரிமாறிக்கொண்ட சில கருத்துக்களால் இந்திய கிரிக்கெட் துறையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் வீரர்கள் தங்கள் காயங்களை மறைக்க உடற்தகுதியை அதிகரிக்கும் ஊசிகளை பயன்படுத்துவதாக அவர் தெரிவித்திருந்தார்.

இந்திய கிரிக்கெட் தேர்வுக் குழுவின் தலைவர் சேத்தன் ஷர்மாவை முதன்முறையாக டிசம்பர் 22, 2022 அன்று பத்திரிகையாளர் சந்தித்தார்.

மேலும் அவர் இரண்டாவது முறையாக ஜனவரி 4, 2023 அன்று தேர்வுக் குழுவின் தலைவரைச் சந்தித்து கலந்துரையாடினார்.

இவ்விரு சந்தர்ப்பங்களிலும் குறித்த ஊடகவியலாளர் கலந்துரையாடல்களை இரகசியமாக பதிவு செய்திருந்தார்.

சர்மாவின் ராஜினாமா குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், அவர் தானாக முன்வந்து பதவி விலகினார் என்றார்.

ஷர்மா டிசம்பர் 2020 இல் பதவிக்கு நியமிக்கப்பட்டார் மற்றும் கடந்த மாதம் மீண்டும் நியமிக்கப்பட்டார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles