Saturday, August 9, 2025
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅமெரிக்க யுவதிக்கு ஹிக்கடுவையில் பாலியல் வன்கொடுமை

அமெரிக்க யுவதிக்கு ஹிக்கடுவையில் பாலியல் வன்கொடுமை

ஹிக்கடுவை பகுதியில் இயங்கிவந்த மசாஜ் நிலையம் ஒன்றில் தனது மகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதாக அமெரிக்க பிரஜை ஒருவர் முறைப்பாடு செய்துள்ளார்.

இலங்கையில் சுற்றுலா பொலிஸ் பிரிவின் பணிப்பாளருக்கு மின் அஞ்சல் வாயிலாக இந்த முறைப்பாட்டினை அவர் பதிவு செய்துள்ளார்.

கடந்த டிசெம்பர் மாதம் இலங்கைக்கு வருகை தந்த தாய், தந்தை, மகள் ஆகிய மூவரும் ஹிக்கடுவை பகுதியில் அமைந்துள்ள விடுதியொன்றில் தங்கியுள்ளனர்.

இந்நிலையில் தாயும் மகளும் மசாஜ் நிலையத்திற்கு சென்றுள்ளனர்.

இதன்போது குறித்த மசாஜ் நிலையத்தில் கடமையாற்றியவரால் அமெரிக்க யுவதி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அமெரிக்க பிரஜையின் முறைப்பாட்டிற்கு அமைய, காலி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம், காலி சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தினால் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles