Saturday, January 24, 2026
27.2 C
Colombo
செய்திகள்உலகம்டுபாயில் அறிமுகமாகும் பறக்கும் டேக்ஸி

டுபாயில் அறிமுகமாகும் பறக்கும் டேக்ஸி

பறக்கும் கார்களை பொதுப் பயன்பாட்டுக்கு கொண்டுவர உலகநாடுகள் முயற்சி மேற்கொண்டுவரும் நிலையில், “2026ஆம் ஆண்டுக்குள் டுபாயில் பறக்கும் டேக்ஸிகள் அறிமுகப்படுத்தப்படும்” என்று ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் டுபாய் ஆட்சியாளருமான சேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பறக்கும் டேக்ஸிகளுக்கான நிலையங்கள் (வெர்டிபோர்ட்) அமைக்க அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒப்புதல் வழங்கினார்.

முதற்கட்டமாக பறக்கும் டேக்ஸி சேவையானது டுபாய் சர்வதேச விமான நிலையம், டவுன்டவுன் டுபாய், பாம் ஜுமேரா, டுபாய் மெரினா ஆகிய 4 பகுதிகளை இணைக்கும் வகையில் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பறக்கும் டேக்ஸி சேவை குறித்து டுபாயின் பொதுப் போக்குவரத்து ஆணையத்தின் சிஇஓ அகமது கூறுகையில், “ஒரு பைலட், 4 பயணிகள் அமர்ந்து பயணிக்கும் வகையில் பறக்கும் டேக்ஸி இருக்கும்.

இந்த பறக்கும் டேக்ஸி மணிக்கு 300 கிமீ வேகத்தில்செல்லும் என தகவல் வெளியாகியுள்ளது. டுபாய் – அபுதாபி உட்பட மற்ற அமீரகங்களுக்கு இடையே சேவை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் இது பயன்பாட்டுக்கு வரும்பட்சத்தில் அபுதாபிக்கு 30 நிமிடத்தில் சென்றுவிட முடியும்’’ என தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles