Wednesday, January 21, 2026
22.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇவ்வருடம் 10 இலட்சம் சுற்றுலாப்பயணிகள் இலங்கை வருவார்கள் என எதிர்பார்ப்பு

இவ்வருடம் 10 இலட்சம் சுற்றுலாப்பயணிகள் இலங்கை வருவார்கள் என எதிர்பார்ப்பு

2023ஆம் ஆண்டில் 10 இலட்சத்து 55 ஆயிரம் சுற்றுலாப்பயணிகள், இலங்கை வருவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுவதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இந்த வருடத்தில் 2 இலட்சத்து 60 ஆயிரம் இந்திய சுற்றுலாப்பயணிகள் இலங்கை வருவார்கள் என எதிர்ப்பார்ப்பதாகவும் அதிகார சபையின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனவரி மாதத்தில் மாத்திரம் ஒரு இலட்சத்து 2 ஆயிரத்து 545 பேர் இலங்கைக்கு சுற்றுலா மேற்கொண்டுள்ளனர்.அத்துடன், பெப்ரவரி மாதத்தின் முதல் வாரத்தில் 18 ஆயிரம் பேர் இலங்கை வந்துள்ளனர்.

2019ஆம் ஆண்டு கொரோனா பரவல் ஏற்படுவதற்கு முன்னர், இலங்கைக்கு 1.9 மில்லியன் சுற்றுலாப்பயணிகள் வந்தனர். அந்த ஆண்டில் இந்தியாவிலிருந்து 3 இலட்சத்து 55 ஆயிரம் சுற்றுலாப்பயணிகள் இலங்கை வந்ததாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles