மறைந்த தினேஷ் ஷாப்டரின் உடலில் இனந்தெரியாத நபரின் டிஎன்ஏ இருப்பதாக அரசாங்க பரிசோதகர் கூறியதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நேற்று (14) கொழும்பு மேலதிக நீதவான் ராஜீந்திர ஜயசூரியவிடம் தெரிவித்தது.
இதன்படி, பொரளை பொது மயானத்தின் பாதுகாவலர்கள் மற்றும் சம்பவ இடத்திற்கு முதலில் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட நால்வரை ஆஜர்படுத்துமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு மேலதிக நீதவான் உத்தரவிட்டார்.
பொரளை பொது மயானத்தில் தினேஷ் ஷாப்டர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் சந்தேகநபர்களாக அடையாளம் காணப்பட்டவர்கள் அல்லது முதலில் சென்றவர்களை மரண விசாரணை திணைக்களத்தில் முன்னிலைப்படுத்துமாறு நீதவான் அறிவித்துள்ளார்.
இறந்தவரின் உடல் பாகங்களை பாதுகாத்து கொள்ளுமாறு மேலதிக நீதவான் ஜயசூரிய, தலைமை சட்ட வைத்திய அதிகாரி மற்றும் அரசாங்க மரண விசாரணை அதிகாரிக்கு உத்தரவிட்டார்.
உயிரிழந்தவரின் வாகனத்தில் காணப்பட்ட தண்ணீர் போத்தல், கைகளை கட்டியிருந்த பட்டி, கழுத்தில் கட்டப்பட்டிருந்த நாடா என்பன அரசாங்க பரிசோதகருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.
#The Morning