Saturday, April 11, 2026
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவிவசாயிகளுக்கு அநீதி இழைக்கப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்

விவசாயிகளுக்கு அநீதி இழைக்கப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்

விவசாயிகளுக்கு நிவாரண நிதி வழங்கும் வேலைத்திட்டத்தில் விவசாயிகளுக்கு அநீதி இழைக்கப்பட்டால், உரிய அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என விவசாய அபிவிருத்தி திணைக்களம் அறிவித்துள்ளது.

விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விவசாய அபிவிருத்தி திணைக்களம் மேலும் அறிவித்துள்ளது.

விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியினால் 800 கோடி ரூபா நிதி வழங்கப்பட்டுள்ளது. குறித்த நிதியின் வாயிலாக விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்பட்டு வருகின்ற நிலையில், பிரதான இரு அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கி கணக்கு இலக்கங்களில் மோசடி செய்து சிலர் திட்டமிட்ட வகையில் புறக்கணிக்கப்படுவதோடு, சிலருக்கு கட்சி அடிப்படையில் முன்னுரிமை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles