வாக்குச்சீட்டு அச்சிடும் பணிகள் தொடர்ந்து இடம்பெறுவதாக அரச அச்சு மா அதிபர் கங்கானி லியனகே தெரிவித்தார்.
உரிய தொகை பணம் செலுத்தப்படாத காரணத்தால் வாக்குச் சீட்டு அச்சிடும் பணிகள் இடைநிறுத்தப்பட்டிருப்பதாக அரச அச்சக திணைக்களம் தெரிவித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரை மேற்கோள்காட்டி நேற்று செய்திகள் வெளியாகின.
இதனால் இன்று (15) மேற்கொள்ளப்படவிருந்த தபால் வாக்குச் சீட்டுகளின் விநியோகப் பணிகள் இடைநிறுத்தப்பட்டதுடன், தபால் வாக்குகளும் காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்டது.
ஆனால் இன்று காலை உரிய தினத்தில் தேர்தல் நடைபெறும் என்ற அறிவிப்பு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரால் வெளியிடப்பட்டுள்ளது.