இதுவரை 2,000 மின்சார மீற்றர்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும், புதிய மின் இணைப்புகளுக்காக காத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்த வாரம் முதல் அந்த மீற்றர்கள் வழங்கப்படும் எனவும் இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் ரொஹான் செனவிரத்ன தெரிவித்தார்.
33,000 மின் வாடிக்கையாளர்கள் இன்னும் புதிய மின் இணைப்புகளை பெற காத்திருப்பதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.
மின்சார மீற்றர்கள் மட்டுமின்றி கம்பிகள், மின்மாற்றிகளுக்கும் கடும் தட்டுப்பாடு நிலவுவதாக சபை சுட்டிக்காட்டுகிறது.
300 முதல் 400 மின் மாற்றிகள் தேவைப்படுவதாகவும், தற்போது 100 மின் மாற்றிகள் மட்டுமே உள்ளதாகவும் அவர்கள் கூறினர்.
இந்தச் சாதனங்களை இறக்குமதி செய்யத் தேவையான டொலர்களை தேட முடியாததால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.