நியூஸிலாந்து தலைநகர் வெலிங்டனை அண்மித்த பகுதிகளில் பாரிய நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.
குறைந்தபட்சம் 30 வினாடிகள் மிதமான குலுக்கலைத் தொடர்ந்து பெரிய அதிர்வுடன் நிலநடுக்கம் தொடங்கியதாக சுமார் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நியூஸிலாந்து பிரஜைகள் தெரிவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
நியூஸிலாந்து நேரத்தின்படி, இன்று (15) இரவு 7.38 அளவில் பராபரமுவிலிருந்து வடமேற்கே 50 கிலோமீற்றர் தொலைவில் 48 கிலோமீற்றர் ஆழத்தில் 6.1 மெக்னிடியூட் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஜியோநெட் கூறுகிறது.
இரவு 8.30 மணியளவில் , ஒக்லேண்ட் மற்றும் கிறிஸ்ட்சர்ச் உட்பட பல பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.
எனினும், சுனாமி அச்சுறுத்தல் எதுவும் இல்லை என அந்நாட்டின் தேசிய அவசரகால முகாமைத்துவ நிறுவகம் அறிவித்துள்ளது.
எவ்வாறாயினும், பின் அதிர்வுகளை எதிர்பார்க்க முடியும் என்று வெலிங்டன் பிராந்திய அவசரநிலை முகாமைத்துவ அலுவலகம் தெரிவித்துள்ளது.
அதன்படி, சிறிது நேரத்திற்குப் பிறகு 4.0 மெக்னிடியூட் அளவில், தௌமருனுய்க்கு (Taumarunui) தென்மேற்கே 45 கிலோமீற்றர் தொலைவிலும், 78 கிமீ ஆழத்திலும் ஏற்பட்டுள்ளது.
மேலும் வாசிக்க