உலக பாரம்பரியமிக்க கண்டி நகரின் முக்கிய வரலாற்று கட்டிடமாக கருதப்படும் போகம்பர சிறைச்சாலையை கண்டி நகரின் கலாசார ஈர்ப்புக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அபிவிருத்தி செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இம்மாதம் 18ஆம் திகதி போகம்பர சிறைச்சாலை வளாகத்திற்குச் சென்று, சிறைச்சாலை கட்டிடத்தை அபிவிருத்தி செய்வது தொடர்பில் கவனம் செலுத்துவார் என முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
போகம்பர சிறைச்சாலைக்கு கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்ட போதே இராஜாங்க அமைச்சர் இதனை அறிவித்துள்ளார்.
சிறைச்சாலையை நவீனமயமாக்கி, சுற்றுலா தளமாக மாற்றும் வகையில், தொன்மையைப் பாதுகாத்து, விடுதி வளாகம் கட்டும் திட்டம் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.