Tuesday, March 18, 2025
24 C
Colombo
செய்திகள்உள்நாட்டு7 பிளாஸ்டிக் - பொலித்தீன் பொருட்களுக்கு தடை

7 பிளாஸ்டிக் – பொலித்தீன் பொருட்களுக்கு தடை

ஒருமுறை மாத்திரம் பயன்படுத்தி அகற்றப்படும் 7 பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பொருட்களை நாட்டிற்குள் உற்பத்தி செய்தல், விற்பனை செய்தல் மற்றும் நாட்டிற்கு இறக்குமதி செய்வதனை தடை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது

சுற்றாடல் அமைச்சர் அமைச்சரவைக்கு முன்வைத்த யோசனைக்கு அனுமதி கிடைத்துள்ளதை தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

இதற்கமைய எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் இந்த தடை அமுலாக்கப்படவுள்ளது.

அதன்படி, ஒருமுறை மாத்திரம் பயன்படுத்துகின்ற பானம் அருந்தும் ப்ளாஸ்ரிக் ஸ்ட்ரோ மற்றும் கலக்கும் உபகரணங்கள், ப்ளாஸ்ரிக் மூலம் தயாரிக்கப்படும் யோகட் கரண்டி உள்ளிட்ட ஒருமுறை பயன்படுத்தி அகற்றப்படும் பீங்கான், கோப்பை (யோகட் கப் தவிர்ந்த), கரண்டிகள், முள்ளுக்கரண்டிகள் மற்றும் கத்திகள், ப்ளாஸ்ரிக் மாலைகள், ப்ளாஸ்ரிக் மூலம் தயாரிக்கப்பட்ட இடியப்ப தட்டுகள் என்பன இவ்வாறு தடைசெய்யப்படவுள்ளன

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles