Monday, December 22, 2025
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமின் கட்டண அதிகரிப்பு - பேச்சுவார்த்தை தோல்வி

மின் கட்டண அதிகரிப்பு – பேச்சுவார்த்தை தோல்வி

மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் மின்சார சபைக்கும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடல் இணக்கப்பாடு இன்றி நிறைவடைந்துள்ளது.

மின்சாரக் கட்டணம் தொடர்பில் ஆலோசித்து முடிவெடுப்பதற்காக மின்சார சபை மற்றும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு தேசிய சபையினால் நேற்று வழங்கப்பட்ட அறிவித்தலின் பிரகாரம் இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றது.

மின் கட்டணத்தை அதிகரிக்காவிட்டால் நீண்ட மின்வெட்டுக்குச் செல்ல நேரிடும் என மின்சார சபை அதிகாரிகள் சுட்டிக்காட்டியிருந்தனர்.

ஆனால் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு இன்று அதற்கு அனுமதிக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles